கண்மாயில் தவறி விழுந்து ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் சாவு


கண்மாயில் தவறி விழுந்து ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் சாவு
x
தினத்தந்தி 14 March 2022 1:29 AM IST (Updated: 14 March 2022 1:29 AM IST)
t-max-icont-min-icon

கண்மாயில் தவறி விழுந்து ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர் உயிரிழந்தார்

மதுரை,
மதுரை கோசாகுளம் நாராயணன் நகரை சேர்ந்தவர் பட்டாபிராம் (வயது 64). திண்டுக்கல் மாவட்டத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த 5-ந்தேதி இவர், அந்த பகுதியில் உள்ள கண்மாய் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கண்மாயில் தவறி விழுந்து விட்டார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Related Tags :
Next Story