கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் எப்போது- மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி பதில்
கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் எப்போது என்பது குறித்து மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்
பெங்களூரு:
உப்பள்ளியில் நேற்று மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
5 மாநில தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றிருக்கிறது. உத்தரகாண்ட் மாநிலத்தில் பா.ஜனதா வெற்றி பெறுவதற்கு நான் மட்டுமே காரணம் இல்லை. பிரதமர் நரேந்திர மோடி தான் முக்கிய காரணமாகும். பிரதமரின் சூறாவளி சுற்றுப்பயணத்தால் தான் இது சாத்தியமானது. 5 மாநில தேர்தல் முடிந்ததும் கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் அல்லது மாற்றியமைப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது.
தற்போது கர்நாடக பட்ஜெட் கூட்டத்தொடர் நடக்கிறது. நாடாளுமன்ற கூட்டத்தொடரும் நடக்கிறது. பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 31-ந் தேதி நிறைவு பெறுகிறது. அதனால் இந்த மாதம் மந்திரிசபை விரிவாக்கம் பற்றி பா.ஜனதா மேலிடம் எந்த ஆலோசனையும் நடைபெற சாத்தியமில்லை. அடுத்த மாதம் (ஏப்ரல்) கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் பற்றி பா.ஜனதா மேலிட தலைவர்களுடன் ஆலோசித்து இறுதி முடிவு செய்யப்படும். மந்திரிசபையை மாற்றியமைப்பது குறித்தும் ஆலோசிக்கப்படும். மேலிட தலைவர்கள் எடுக்கும் முடிவே இறுதியானது. 5 மாநில தேர்தலில் காங்கிரசுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டி உள்ளனர்.
இவ்வாறு அவா் கூறினார்.
Related Tags :
Next Story