பெங்களூரு விமான நிலையத்தில் 2 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல்
பெங்களூரு விமான நிலையத்தில் 2 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல்
பெங்களூரு:
பெங்களூருவில் உள்ள ஒரு கூரியர் நிறுவனத்திற்கு வந்து உள்ள பார்சலில் போதைப்பொருட்கள் இருப்பதாகவும், அந்த போதைப்பொருட்கள் பெங்களூருவில் இருந்து நியூசிலாந்துக்கு கடத்தப்பட உள்ளதாகவும் பெங்களூரு மண்டல போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்பேரில் அந்த கூரியர் நிறுவனத்திற்கு சென்ற போலீசார், நியூசிலாந்துக்கு அனுப்பப்பட இருந்த பார்சல்களை பிரித்து பார்த்தனர்.
அப்போது ஒரு பார்சலில் உலோக கம்பிகள் இருந்தன.
அந்த கம்பிகளை பிரித்து பார்த்த போது அதற்குள் போதைப்பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பார்சலில் வந்த 1 கிலோ 900 கிராம் சூடோபெட்ரைன் என்ற தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக தென் ஆப்பிரிக்காவை சேர்ந்தவர் உள்பட 2 பேரை போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ், போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்து உள்ளனர். அவர்கள் பெயர்களை தெரிவிக்க அதிகாரிகள் மறுத்து விட்டனர்.
Related Tags :
Next Story