பெண்ணிடம் நகை பறிப்பு
சிவகாசி அருகே பெண்ணிடம் நகையை பறித்து சென்றனர்.
சிவகாசி,
சிவகாசி அம்மன்கோவில்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் மனைவி உமாராணி (வயது 47). இவர் தனது வீட்டின் அருகே உள்ள ஒரு மளிகை கடைக்கு சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக நடந்து வந்த வாலிபர் ஒருவர் திடீரென உமாராணி கழுத்தில் கிடந்த 8 பவுன் தாலி செயினை பறித் துக்கொண்டு தப்பி ஓட முயன்றுள்ளார். இதில் அதிர்ச்சி அடைந்த உமாராணி சத்தம் போட்டுள்ளார். உடனே அந்த பகுதியில் நின்று கொண்டிருந்தவர்கள் சிலர் விரட்டி சென்று தாலிசெயினை பறித்துசென்ற வாலிபரை பிடித்தனர். பின்னர் அவர்கள் அந்த வாலிபரை சிவகாசி கிழக்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசாரின் விசாரணையில் அந்த வாலிபர் ராஜபாளையம் சேத்தூர் மேட்டுபட்டியை சேர்ந்த பூபதி ராஜ் ( 37) என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story