ஓமலூர் அருகே பரிதாபம்:தங்கையின் திருமணத்துக்கு மனைவி வர மறுத்ததால் டிரைவர் தற்கொலை-திருமணம் முடிந்த சில மணி நேரத்தில் தூக்குப்போட்டு உயிரை மாய்த்துக்கொண்டார்
ஓமலூர் அருகே தங்கையின் திருமணத்துக்கு மனைவி வர மறுத்ததால் டிரைவர் தற்கொலை செய்து கொண்டார். திருமணம் முடிந்த சில மணி நேரத்தில் தூக்குப்போட்டு உயிரை மாய்த்துக்கொண்டார்.
ஓமலூர்:
ஓமலூர் அருகே தங்கையின் திருமணத்துக்கு மனைவி வர மறுத்ததால் டிரைவர் தற்கொலை செய்து கொண்டார். திருமணம் முடிந்த சில மணி நேரத்தில் தூக்குப்போட்டு உயிரை மாய்த்துக்கொண்டார்.
இந்த பரிதாப சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கணவன்- மனைவி தகராறு
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த கருத்தானூர் பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 33). டிரைவர். இவருடைய மனைவி சசிகலா. கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 3 ஆண்டுகளாக சசிகலா அவரது பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இதற்கிடையே மணியின் தங்கை திருமணம் நேற்று நடந்தது. திருமணத்துக்கு சசிகலாவை மணி அழைத்துள்ளார். அதற்கு அவர் வர மறுத்ததாக கூறப்படுகிறது. இதில் மனம் உடைந்து மணி காணப்பட்டார்.
தூக்குப்போட்டு தற்கொலை
அப்படி இருந்தும் நேற்று காலை 7 மணி அளவில் தங்கையின் திருமணத்தை நல்லபடியாக நடத்தி முடித்தார். இருந்தாலும் மனைவி வராதது அவருக்கு மிகுந்த மன வேதனையை கொடுத்ததாக தெரிகிறது.
பின்பு தனது வீட்டுக்கு வந்த அவர், காலை 10 மணி அளவில் விஷம் குடித்தார். மேலும் தன்னுடைய மனைவியின் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அக்கம் பக்கத்தினர் இதனை பார்த்து ஓமலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் விசாரணை
தகவல் அறிந்த ஓமலூர் போலீசார் விரைந்து வந்து மணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இறந்த மணிக்கு 2 மகன்கள் உள்ளனர்.
தங்கையின் திருமணத்துக்கு மனைவி வர மறுத்ததால் மனம் உடைந்த டிரைவர், திருமணம் முடிந்த சில மணி நேரத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story