தண்ணீர் தொட்டி சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி சாவு


தண்ணீர் தொட்டி சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 14 March 2022 2:42 AM IST (Updated: 14 March 2022 2:42 AM IST)
t-max-icont-min-icon

தண்ணீர் தொட்டி சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி இறந்தார்

இளம்பிள்ளை:
காடையாம்பட்டி புதுவீதி பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (வயது 43). இவர், தோட்ட வேலை செய்யும் தொழிலாளி. இவருக்கு விஜயா என்ற மனைவியும் ஒரு மகனும், மகளும் உள்ளனர். இவர், மகுடஞ்சாவடி யூனியன் அலுவலகம் அருகில் தனியார் தோட்டத்தில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு தோட்டத்தில் உள்ள தண்ணீர் தொட்டியின் சுவர் இடிந்து விழுந்தது. அதன் இடுபாடுகளுக்குள் சிக்கி சுப்பிரமணியம் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்த மகுடஞ்சாவடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பாலசுப்பிரமணியம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மகுடஞ்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Next Story