இளைஞர்களுக்கான கலை போட்டிகள்


இளைஞர்களுக்கான கலை போட்டிகள்
x
தினத்தந்தி 14 March 2022 4:04 AM IST (Updated: 14 March 2022 4:04 AM IST)
t-max-icont-min-icon

இளைஞர்களுக்கான கலை போட்டிகள் நாளை நடக்கிறது.

அரியலூர்:
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறை சார்பில் அரியலூர் மாவட்ட அளவிலான 17 முதல் 35 வயதுக்கு உட்பட்ட ஆண்கள், பெண்களுக்கு குரலிசை, கருவியிசை, பரத நாட்டியம், கிராமிய நடனம், ஓவியம் ஆகிய 5 பிரிவுகளில் கலை போட்டிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) கீழப்பழுவூர் மீரா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது. குரலிசை, கருவியிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம் ஆகிய போட்டிகள் காலை 10 மணிக்கும், ஓவியப் போட்டி மதியம் 2 மணிக்கும் நடைபெறும். குழுவாக போட்டியில் பங்கு பெற அனுமதியில்லை. தனிநபராக அதிகபட்சம் 5 நிமிடம் நிகழ்ச்சி நடத்திட அனுமதிக்கப்படுவார்கள். குரலிசை போட்டியிலும், நாதசுரம், வயலின், வீணை, புல்லாங்குழல், ஜலதரங்கம், பேண்டுவாத்தியம், மாண்டலின், கிதார், சாக்சபோன், கிளாரிநெட் போன்ற கருவி இசைப்போட்டியிலும் 5 வர்ணங்கள் ராகம் சுரத்துடன் 5 தமிழ் பாடல்கள் இசைக்கும் தரத்தில் உள்ள இளைஞர்கள் பங்கு பெறலாம். தாளக்கருவிகளான தவில், மிருதங்கம், கஞ்சிரா, கடம், மோர்சிங், கொன்னக்கோல் ஆகிய பிரிவுகளை சேர்ந்தவர்கள் 5 தாளங்களில் வாசிக்கின்ற தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். பரதநாட்டியத்தில் 3 வர்ணங்கள் மற்றும் 5 தமிழ் பாடல்கள் நிகழ்த்தும் நிலையில் உள்ளவர்கள் போட்டியில் பங்கேற்கலாம். கிராமிய நடனத்தில் கரகாட்டம், காவடியாட்டம், புரவியாட்டம், காளை ஆட்டம், மயிலாட்டம், கை சிலம்பாட்டம், மரக்கால் ஆட்டம், ஓயிலாட்டம், புலியாட்டம், தப்பாட்டம் (பறையாட்டம்) மலை மக்கள் நடனங்கள் போன்ற பாரம்பரிய கிராமிய நடனங்கள் அனுமதிக்கப்படும். ஓவியப்போட்டியில் பங்கேற்பவர்களுக்கான ஓவிய தாள்கள் வழங்கப்படும். அக்ரலிக் வண்ணம் மற்றும் நீர்வண்ணம் மட்டுமே பயன்படுத்த வேண்டும். நடுவர்களால் கொடுக்கப்படும் தலைப்பில் ஓவியங்கள் வரையப்பட வேண்டும் அதிகபட்சம் 3 மணி நேரம் அனுதிக்கப்படுவார்கள். மாவட்ட போட்டியில் முதலிடம் பெறும் இளைஞர்கள் மாநில போட்டிக்கு அனுமதிக்கப்படுவார்கள். மேலும் விவரங்களை கலை பண்பாட்டுத்துறையின் www.artandculture.tn.gov.in இணையதளம் வாயிலாக பெறலாம். அல்லது கலை பண்பாட்டுத்துறையின் திருச்சி மண்டல அலுவலகத்தின் 7708449321, 9047650951, 9443191334 என்ற செல்போன் எண்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாய்ப்பினை கலைத்திறன் மிக்க அரியலூர் மாவட்ட இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கலெக்டர் ரமணசரஸ்வதி வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Next Story