நாட்டறம்பள்ளி அருகே ஊதுபத்தி தயாரிக்கும் நிறுவனத்தில் தீ விபத்து
நாட்டறம்பள்ளி அருகே ஊது பத்தி தயாரிக்கும் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.
ஜோலார்பேட்டை
நாட்டறம்பள்ளி அருகே ஊது பத்தி தயாரிக்கும் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.
தீ விபத்து
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி பேரூராட்சி வார்டு தி.மு.க. உறுப்பினர் குருசேவ். அதிபெரமனூர் பகுதியில் இவருக்கு சொந்தமான ஊது பத்தி தயாரிக்கும் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு 130 பணியாளர்கள் வேலைசெய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று காலை கம்பெனிக்கு அருகில் உள்ள உயர்மின் கோபுரத்தில் மின்கசிவு ஏற்பட்டு ஊதுபத்தி தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த குடோனில் தீப்பொறி பட்டு தீ பிடித்து எரியத்தொடங்கியது. தொடர்ந்து கொளுந்து விட்டு தீ எரிந்தது.
ரூ.30 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்
காலையில் வேலைக்கு வந்த பணியாளர்கள் தீப்பற்றி எரிவதை பார்த்து நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தினர் தகவலின் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் கலைமணி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று சுமார் 5 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.
இது குறித்து தகவலறிந்ததும் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் என்.கே.ஆர். சூரியகுமார், நாட்டறம்பள்ளி தாசில்தார் பூங்கொடி, வருவாய் ஆய்வாளர் நந்தினி, கிராம நிர்வாக அலுவலர் சசிகுமார் ஆகியோர் சம்பவம் இடத்திற்கு சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினர்.
Related Tags :
Next Story