கல்குவாரி வாகனங்களை குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் இயக்க வேண்டும்
போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் கல்குவாரி வாகனங்களை குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் இயக்க வேண்டும்
தூசி
திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் தூசி போலீஸ் நிலையத்துக்கு சிப்காட் தொழிற்சாலை உரிமையாளர்கள், அரசு அனுமதி பெற்ற கல்குவாரி உரிமையாளர்களை வரவழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
அப்போது போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் பேசியதாவது:-
தூசி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட வந்தவாசி-காஞ்சீபுரம் சாலையில் சிப்காட் தொழிற்சாலைகள் அமைந்துள்ளன.
காலை மற்றும் மாலை வேளையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
எனவே கல்குவாரி வாகனங்கள் காலை 8 மணியில் இருந்து காலை 9 மணி வரையிலும், மாலை 4 மணியில் இருந்து காலை 6 மணி வரையிலும் செல்லக்கூடாது.
லாரிகளில் அதிக பாரம் ஏற்றக்கூடாது, தொழிற்சாலைகளில் வேலை கொடுக்க வேண்டும், மாமூல் கொடுக்க வேண்டும் என்று கட்டப்பஞ்சாயத்துகளில் ஈடுபடுவோர் குறித்து உடனுக்குடன் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
கல்குவாரியினர் தமிழக அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் ேபசினார்.
அதைத்தொடர்ந்து தூசி போலீஸ் நிலையத்தில் மரக்கன்றுகள் நட்டு வைத்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
Related Tags :
Next Story