வடசென்னை அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு


வடசென்னை அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு
x
தினத்தந்தி 14 March 2022 7:02 PM IST (Updated: 14 March 2022 7:02 PM IST)
t-max-icont-min-icon

வடசென்னை அனல் மின் நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மின் உற்பத்தி பாதிப்பு பாதிக்கப்பட்டு உள்ளது.

மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு ஊராட்சியில் வடசென்னை அனல்மின் நிலையம் உள்ளது. இங்கு முதல் யூனிட்டில் 3 அலகுகளில் தலா 210 மெகாவாட்டும், 2-வது யூனிட்டில் 2 அலகுகளில் தலா 600 வீதம் 1,200 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தநிலையில் முதல் யூனிட்டில் 2-வது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. அதனை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story