தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவில்: பங்குனி உத்திரத்திருவிழா வியாழக்கிழமை தொடக்கம்


தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவில்:  பங்குனி உத்திரத்திருவிழா வியாழக்கிழமை தொடக்கம்
x
தினத்தந்தி 14 March 2022 7:05 PM IST (Updated: 14 March 2022 7:05 PM IST)
t-max-icont-min-icon

தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவிலில் பங்குனி உத்திரத்திருவிழா வியாழக்கிழமை தொடங்கி நடைபெறுகிறது

உடன்குடி:
திருச்செந்தூர் தாலுகா காயாமொழி அருகே உள்ள தேரிகுடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவில் பங்குனி உத்திரத் திருவிழா நாளை மறுநாள் (வியாழக்கிழமை) மாலை 6 மணிக்கு மாவிளக்கு பூஜையுடன் தொடங்குகிறது. இரவு 7 மணிக்கு திருவிளக்கு பூஜை நடக்கிறது. 
18-ந் தேதி காலை 9 மணிக்கு தாமிரபரணி ஆற்றில் தீர்த்தம் எடுத்து வருதல், 10 மணிக்கு வில்லிசை, காலை 11 மணிக்கு சுவாமி கற்குவேல் அய்யனார் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து அலங்கார ஆராதனைகள் நடைபெறும். 
திருவிழாவையொட்டி தமிழ்நாட்டில் பல பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து சுவாமி தரிசனம் செய்வார்கள். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் காந்திமதி, தக்கார் அஜித் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்,

Next Story