2 ஆயிரத்து 825 பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்


2 ஆயிரத்து 825 பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்
x
தினத்தந்தி 14 March 2022 7:56 PM IST (Updated: 14 March 2022 7:56 PM IST)
t-max-icont-min-icon

2 ஆயிரத்து 825 பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்

முத்தூர்:
முத்தூர் பகுதியை சேர்ந்த 2 ஆயிரத்து 825 பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டன.
குடற்புழு நீக்க மாத்திரைகள்
தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு தமிழக அரசு, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, மாவட்ட நிர்வாகம் ஆகியோர் உத்தரவின்படி முத்தூர் பகுதிகளில் குடற்புழு நீக்க மருத்துவ முகாம் நேற்று காலை நடைபெற்றது.
 இதன்படி நகர சுற்றுவட்டார கிராம பகுதிகளில் துணை சுகாதார நிலையங்கள், அரசு ஆரம்ப, நடுநிலை, மேல்நிலைப் பள்ளிகள், அங்கன்வாடி மையங்களில் சுகாதாரத்துறை மருத்துவ குழு டாக்டர்கள் பிரசாத் தாமரைக்கண்ணன், மார்கினி, வினோதினி, நவீனா ஆகியோர் தலைமையில் அங்கன்வாடி பணியாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் மூலம் முதல் கட்டமாக 2 வயது முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகள், மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது.
2,825 பேருக்கு
அந்த வகையில் முத்தூர் பகுதியில் நேற்று ஒரே நாளில் மொத்தம் 2 ஆயிரத்து 825 குழந்தைகள், மாணவ - மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது. இம்முகாமில் பகுதி நேர சுகாதார செவிலியர் சரோஜா, சுகாதார ஆய்வாளர் வேல்முருகன் மற்றும் மருத்துவ பணியாளர்கள், அங்கன்வாடி மைய பொறுப்பாளர்கள், உதவியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story