தீ விபத்தில் வீடு எரிந்து சேதம்


தீ விபத்தில் வீடு எரிந்து சேதம்
x
தினத்தந்தி 14 March 2022 10:38 PM IST (Updated: 14 March 2022 10:38 PM IST)
t-max-icont-min-icon

தியாகதுருகம் அருகே தீ விபத்தில் வீடு எரிந்து சேதமானது.

கண்டாச்சிமங்கலம், 

தியாகதுருகம் அருகே உள்ள மேல்விழி கிராமத்தை சேர்ந்தவர் மத்தேயு (வயது 49) கூலித்தொழிலாளி. இவருடைய வீடு நேற்று திடீரென தீப்பற்றி எரிந்தது. இதைபார்த்த அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும் அவர்களால் முடியவில்லை. இதுபற்றி அறிந்த தியாகதுருகம் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் வீட்டில் இருந்த 5 பவுன் நகை, ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் ரொக்கம், பத்திரங்கள், சான்றிதழ்கள், டி.வி., பீரோ உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் எரிந்து சேதமானது. 

இதன் சேதமதிப்பு ரூ. 4 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து தியாகதுருகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story