நெல் மூட்டைகளை பாதுகாக்க மேற்கூரை அமைக்க வேண்டும். அமைச்சர் ஆர்.காந்தி உத்தரவு


நெல் மூட்டைகளை பாதுகாக்க மேற்கூரை அமைக்க வேண்டும். அமைச்சர் ஆர்.காந்தி உத்தரவு
x
தினத்தந்தி 14 March 2022 10:47 PM IST (Updated: 14 March 2022 10:47 PM IST)
t-max-icont-min-icon

அகவலம் நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் நெல்மூட்டைகளை பாதுகாக்க மேற்கூரை அமைக்க அமைச்சர் காந்தி உத்தரவிட்டார்.

நெமிலி

அகவலம் நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் நெல்மூட்டைகளை பாதுகாக்க மேற்கூரை அமைக்க அமைச்சர் காந்தி உத்தரவிட்டார்.

அமைச்சர் ஆர்.காந்தி ஆய்வு 

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த அகவலம் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு நெமிலி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லை இடைத்தரகர்கள் இன்றி விற்பனை செய்து பயன்பெற்று வருகின்றனர். இந்த நிலையில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது இந்த மையத்தில் இதுவரை எவ்வளவு நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது, எவ்வளவு விவசாயிகள் பயனடைந்துள்ளனர், நெல்லுக்கான விலை எவ்வளவு வழங்கப்படுகிறது என்பதை கேட்டறிந்தார். இதுவரை 1815 மூட்டை நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அரசின் வழிகாட்டுதல் படி கணினி மூலம் பதிவு செய்து 86 விவசாயிகள் தங்களின் நெல்லை விற்பனை செய்துள்ளனர் எனவும், சன்னரக நெல்லுக்கு ரூ.2,060, புதிய ரக நெல்லுக்கு ரூ.2,015் வழங்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேற்கூரை அமைக்க வேண்டும்

அதைத்தொடர்ந்து இங்கு கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் திறந்த வெளியில் இருப்பதை பார்த்து இதற்கு தனியாக மேற்கூரை அமைத்து முறையாக பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். 

இந்த ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன், கோட்டாட்சியர் சிவதாசு, தாசில்தார் ரவி, நெமிலி ஒன்றியக் குழு தலைவர் வடிவேலு, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் சுந்தராம்பாள் பெருமாள் மற்றும் அரசு அலுவலர்கள், விவசாயிகள் உடனிருந்தனர்.

Next Story