இளையான்குடி பகுதியில் மின்சாரம் நிறுத்தம்
இளையான்குடி பகுதியில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இளையான்குடி,
இளையான்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் 15-ந்தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இளையான்குடி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளான இளையான்குடி, புதூர், கண்ணமங்களம், தாயமங்களம், சோதுகுடி, கருஞ்சுத்தி, கரும்புக் கூட்டம், நகரகுடி, குமாரக்குறிச்சி, அதிகரை, நெடுங்குளம், கீழாயூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளுக்கும் மின் வினியோகம் தடை செய்யப்படும் என செயற்பொறியாளர் செல்வம் அறிவித்துள்ளார்.
Related Tags :
Next Story