மகாமுத்துமாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
திருக்கடையூர் மகாமுத்துமாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திருக்கடையூர்:-
திருக்கடையூர் மகாமுத்துமாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தீமிதி திருவிழா
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் கீழ வீதியில் மகா முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் தீமிதி திருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினமும் மகா முத்துமாரியம்மனுக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
இதனையடுத்து நேற்று முன்தினம் தீமிதி திருவிழாவை முன்னிட்டு மாலை 4 மணி அளவில் திருக்கடையூர் ஆணைக்குளத்தில் உள்ள எதிர்காலிஸ்வரர் கோவிலில் இருந்து பக்தர்கள் பால் காவடி, அலகு காவடி, பறவை காவடி எடுத்து ஊர்வலமாக வந்தனர்.
நேர்த்திக்கடன்
கடைவீதி, சன்னதி வீதி, வடக்கு வீதி, மேல வீதி வழியாக கோவிலை ஊர்வலம் வந்தடைந்தது. அதனை தொடர்ந்து மகா முத்து மாரியம்மனுக்கு பால், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டது. பின்னர் கோவில் முன்பு தீமிதி உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தொடர்ந்து இரவு புஷ்ப பல்லக்கில் அம்மன் வீதி உலா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்து இருந்தனர்.
Related Tags :
Next Story