ஏரியில் மூழ்கியவர் பிணமாக மீட்பு
திருக்கோவிலூர் அருகே ஏரியில் மூழ்கியவர் பிணமாக மீட்கப்பட்டார்.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் அருகே உள்ள கொடுங்கால் கிராமத்தை சேர்ந்தவர் இதயகுமார்(வயது 45). குடும்ப பிரச்சினை காரணமாக இவருடைய மனைவி பிரிந்து வாழ்ந்து வருவதாக தெரிகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று தனது மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த இதயகுமார், தற்கொலை செய்து கொள்வதற்காக அதே ஊரில் உள்ள ஏரியில் குதித்து நீரில் மூழ்கினார். இதுபற்றி தகவல் அறிந்த திருக்கோவிலூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து இதயகுமாரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் அவர் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் நேற்று மதியம் இதயகுமாரின் உடல் ஏரியில் மிதந்தது. இதுபற்றி அறிந்த திருக்கோவிலூர் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் மற்றும் போலீசார் விரைந்து வந்து இதயகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story