அரக்கோணத்தில் ரெயிலில் பயணம் செய்த முதியவர் திடீர் சாவு
அரக்கோணத்தில் ரெயிலில் பயணம் செய்த முதியவர் திடீரென இறந்தார்.
அரக்கோணம்
சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து பெங்களூரு செல்லும் பிருந்தாவனம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பெங்களுருவை சார்ந்த பாபு (வயது 60), இவரது மணவி ஆகிய இருவரும் பயணம் செய்தனர். ரெயில் அரக்கோணம் அருகே வந்த போது திடீரென பாபுவிற்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து இருவரும் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் இறங்கினர். நடைமேடையில் பாபுவிற்கு அவரது மனைவி மற்றும் பொதுமக்கள் சிலரும் முதலுதவி அளித்தனர். தொடர்ந்து பாபுவை அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்துவிட்டார்.
இது குறித்து அரக்கோணம் ரெயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story