சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் லாரி டிரைவருக்கு 20 ஆண்டு சிறை கிருஷ்ணகிரி கோர்ட்டு தீர்ப்பு
காவேரிப்பட்டணம் அருகே சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த லாரி டிரைவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
கிருஷ்ணகிரி:
காவேரிப்பட்டணம் அருகே சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த லாரி டிரைவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
லாரி டிரைவர்
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள செட்டிமாரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 24). லாரி டிரைவர். இவர் 17 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 14-ந் தேதி கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிரபாகரனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணையின் முடிந்து நேற்று நீதிபதி லதா தீர்ப்பு வழங்கினார்.
20 ஆண்டு சிறை
அவர் தனது தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரபாகரனுக்கு சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய குற்றத்திற்காக 20 ஆண்டு சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும், கட்ட தவறினால் கூடுதலாக ஓராண்டு சிறை தண்டனையும், சிறுமியை கடத்திய குற்றத்திற்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும், அபராதம் கட்ட தவறினால் கூடுதலாக 6 மாத சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார்.
மேலும் தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். அரசு தரப்பில் வக்கீல் உமாதேவி மங்களமேரி ஆஜராகி வாதாடினர்.
Related Tags :
Next Story