பென்னாகரம் அருகே 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் ஜெராக்ஸ் கடைக்காரர் போக்சோ சட்டத்தில் கைது


பென்னாகரம் அருகே 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் ஜெராக்ஸ் கடைக்காரர் போக்சோ சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 14 March 2022 11:08 PM IST (Updated: 14 March 2022 11:08 PM IST)
t-max-icont-min-icon

பென்னாகரம் அருகே5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஜெராக்ஸ் கடைக்காரர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

பென்னாகரம்:
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள நாகமரை ரோடு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 39). பென்னாகரத்தில் ஜெராக்ஸ் கடை வைத்துள்ளார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் பென்னாகரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சீனிவாசனை கைது செய்தனர்.

Next Story