கலெக்டர் விசாரணை நடத்தக்கோரி விவசாயிகள் போராட்டம்
பயிர்க்காப்பீட்டு திட்டத்தில் முறைகேடு குறித்து கலெக்டர் விசாரணை நடத்த வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோட்டூர்;
பயிர்க்காப்பீட்டு திட்டத்தில் முறைகேடு குறித்து கலெக்டர் விசாரணை நடத்த வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பயிர்க்காப்பீ்ட்டு தொகை
காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் அதிக மழை, புயல், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களால் விவசாயம் பாதிக்கப்படுகிறது. விவசாயிகள் நலன் பாதுகாத்திட மத்திய, மாநில அரசுகள் தங்களது பங்களிப்புடன் பயிர்க்காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்யும் நிலப்பரப்புக்கு ஏற்ப காப்பீட்டு தொகையை செலுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் பயிர்க்காப்பீட்டு திட்டத்தில் முறைகேடு செய்யப்பட்டதை கண்டித்தும் இது தொடர்பாக கலெடர் விசாரணை நடத்த வலியுறுத்தியும் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் உரிமை பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் தர்ம சாமிநாதன் தலைமையில் கோட்டூர் வேளாண் விரிவாக்க அலுவலகம் வாசல் முன்பு விவசாயிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் விவசாயிகள் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story