தி.முக. கவுன்சிலாின் மோட்டார் சைக்கிள் எரிப்பு


தி.முக. கவுன்சிலாின் மோட்டார் சைக்கிள் எரிப்பு
x
தினத்தந்தி 14 March 2022 11:49 PM IST (Updated: 14 March 2022 11:49 PM IST)
t-max-icont-min-icon

தி.முக. கவுன்சிலாின் மோட்டார் சைக்கிள் எரிப்பு

முத்துப்பேட்டை;
 முத்துப்பேட்டை பங்காளா சாலை சிவராமன் காலனி பகுதியை சேர்ந்தவர் சிவஅய்யப்பன் (வயது52). இவர் தி.மு.க. நகர துணைச்செயலாளராக உள்ளார். தற்போது அப்பகுதி 6-வது வார்டு பேரூராட்சி கவுன்சிலராக 2-வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தநிலையில் சிவஅய்யப்பன் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் பணிகளை முடித்துவிட்டு தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் வாசலில் நிறுத்திவிட்டு வீட்டில் தூங்கிவிட்டார். நள்ளிரவு சுமார் 12 மணியளவில் அருகில் உள்ள அவரது அண்ணன் கணேசன் வீட்டின் ஜன்னல் வழியாக வெளிச்சம் தெரிவதை கண்டு வெளியே வந்து பார்த்தபோது சிவஅய்யப்பனின் மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து  எரிந்துக்கொண்டு இருந்தது. இதைத்தொடர்ந்து வெளியே வந்த சிவஅய்யப்பன் மற்றும் அப்பகுதியினர் தீயை அணைத்தனர். இது குறித்து தகவல் அறிந்த முத்துப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து 
விசாரணை நடத்தினர். விசாரணையில்  யாரோ மர்ம நபர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி மோட்டார் சைக்கிளை தீவைத்து எரித்தது தெரியவந்தது.  மேலும் அங்கு கிடந்த பெட்ரோல் கொண்டு வந்த பாட்டில் மற்றும் தீக்குச்சிகளை சேகரித்த போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

---


Next Story