கேரள மாநில லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது


கேரள மாநில லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 14 March 2022 11:54 PM IST (Updated: 14 March 2022 11:54 PM IST)
t-max-icont-min-icon

சிதம்பரத்தில் லாட்டரி சீட்டு விற்ற புகாரில், கேராளாவை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிதம்பரம், 

சிதம்பரம் நகர போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான போலீசார், நேற்று காலை சிதம்பரம் கஞ்சித்தொட்டி பகுதியில் தீவிர ரோந்து பணியில் இருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக நின்றிருந்த 3 மர்ம நபர்களை பிடிக்க முயன்றபோது ஒருவர் தப்பி ஓடிவிட்டார். 2 பேர் மட்டும் பிடிபட்டனர். 

விசாரணையில் அவர்கள் சிதம்பரம் அப்பாவு சந்து பகுதியை சேர்ந்த கந்தன்(வயது 52), லால்புரம் காமராஜ் நகர் ரவி(57) என்பதும், தப்பி ஓடியவர் ரகு என்கிற ரகுநாதன் என்பதும், கேரள மாநில லாட்டரி சீட்டுளை விற்பனை செய்து கொண்டிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து கந்தன், ரவி ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடம் 10 பில் புக், ரூ.4,500 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய ரகு என்கிற ரகுநாதனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். 

Next Story