பொதுப்பாதையை மறைத்து வீடு கட்டியவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் மறியல்
பொதுப்பாதையை மறைத்து வீடு கட்டியவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
கரூர்
கரூர்- கோவை சாலையில் உள்ள ஆண்டாங்கோவில் புதூர் காலனி தெரு பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த ஒருவர் பொதுப்பாதையை மறைத்து வீடு கட்டி உள்ளதாக கூறி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கரூர்- கோவை சாலையின் மில் கேட் பகுதியில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த கரூர் டவுன் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் பொது பாதையை மறைத்து வீடு கட்டியவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் கரூர்-கோவை சாலையில் சுமார் 20 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story