வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்
வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது
ஆவூர்
விராலிமலை ஒன்றியம், விளாப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் தமிழக அரசின் குடும்ப நலம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. முகாமில் பொது மருத்துவம், குழந்தை நலம், கண் பரிசோதனை, காது, மூக்கு தொண்டை, இதயநோய் சிகிச்சை, புற்றுநோய், காசநோய், நீரிழிவு நோய், மகப்பேறு மருத்துவம், சித்த மருத்துவம், மனநலன் ஆகியவற்றிற்கு டாக்டர்கள் குழுவினர் பரிசோதித்து மருந்து, மாத்திரைகள் வழங்கினர். இதில், விளாப்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து 472 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர். முகாமில், 40 பேருக்கு கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 10 பேர் கண்புரை இலவச அறுவை சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை விராலிமலை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் விக்னேஷ், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சங்கரன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story