கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு


கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
x
தினத்தந்தி 15 March 2022 1:01 AM IST (Updated: 15 March 2022 1:01 AM IST)
t-max-icont-min-icon

ஏர்வாடி அருகே கோவில் உண்டியலை உடைத்து பணத்தை மர்மநபர் திருடிச் சென்றார்.

ஏர்வாடி:
ஏர்வாடி அருகே தளபதிசமுத்திரம் நான்குவழிச் சாலை அருகே முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் உள்ளது. சம்பவத்தன்று இரவில் கோவில் முன் பக்க கதவை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்தனர். அங்கிருந்த உண்டியலை உடைத்து, அதிலிருந்த ரூ.2,500-ஐ திருடி சென்று விட்டனர். மறுநாள் காலையில் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் கோவிலில் திருட்டு நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி கோவில் நிர்வாகி தளபதிசமுத்திரத்தை சேர்ந்த ஆறுமுகத்திற்கு (வயது 62) தகவல் கொடுத்தனர். அவர் ஏர்வாடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story