மானூர் பகுதியில் மின்தடை அறிவிப்பு
மானூர் பகுதியில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை:
மானூர், சிதம்பரபுரம் ஆகிய துணை மின் நிலையங்களில் 15-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. எனவே அந்தந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம் பெறும் மானூர், மாவடி, தெற்குபட்டி, களக்குடி, எட்டாங்குளம், கானார்பட்டி, பிள்ளையார்குளம், குறிச்சிகுளம், கீழ் குளம், ஊரல்வாய் மொழி, மதகநேரி, செம்பிகுளம் மற்றும் துணை மின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் காற்றாலைகளுக்கும் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
இந்த தகவலை, நெல்லை கிராமப்புற மின் வினியோக செயற்பொறியாளர் முத்தரசு, பழவூர் காற்றாலை பண்ணை உதவி செயற்பொறியாளர் ஸ்ரீகலா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story