தாம்பரம் செல்லும் அந்தியோதயா ரெயிலில் முன்பதிவு பெட்டிகள் நீக்கம்


தாம்பரம் செல்லும் அந்தியோதயா ரெயிலில் முன்பதிவு பெட்டிகள் நீக்கம்
x
தினத்தந்தி 15 March 2022 1:11 AM IST (Updated: 15 March 2022 1:11 AM IST)
t-max-icont-min-icon

தாம்பரம் செல்லும் அந்தியோதயா ரெயிலில் முன்பதிவு பெட்டிகள் நீக்கப்பட்டுள்ளது

மதுரை, 
நாகர்கோவிலில் இருந்து மதுரை வழியாக பெங்களூருவுக்கு தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலில் பயணிகளின் வசதிக்காக கூடுதல் பெட்டி இணைக்கப்படவுள்ளது. அதன்படி, பெங்களூருவில் இருந்து இன்று (செவ்வாய்க்கிழமை) புறப்படும் ரெயிலில் (வ.எண்.17235) மற்றும் நாகர்கோவிலில் இருந்து நாளை (புதன்கிழமை) புறப்படும் ரெயிலில் (வ.எண்.17236) ஒரு 2-ம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி நிரந்தரமாக இணைக்கப்படுகிறது. அதையடுத்து, இந்த ரெயில்களில் 2 இரண்டடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 5 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 11 இரண்டாம் வகுப்பு தூங்கும்வசதி பெட்டிகள், 3 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள் மற்றும் 2 பார்சல் பெட்டிகளுடன் இணைந்த பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
அதேபோல, நாகர்கோவிலில் இருந்து மதுரை வழியாக தாம்பரம் வரை இயக்கப்படும் முற்றிலும் 2-ம் வகுப்பு இருக்கை வசதி கொண்ட அந்தியோதயா வாரம் 3 முறை எக்ஸ்பிரஸ் ரெயிலின் பெட்டிகள் அனைத்தும் பொதுப்பெட்டிகளாக மாற்றம் செய்யப்படுகின்றன. அதன்படி, தாம்பரத்தில் இருந்து நாளை (புதன்கிழமை) புறப்படும் ரெயிலிலும் (வ.எண்.22657), நாகர்கோவிலில் இருந்து புறப்படும் ரெயிலில் (வ.எண்.22658) வருகிற 17-ந் தேதி முதல் முன்பதிவு பெட்டிகள் பொதுப்பெட்டிகளாக மாற்றம் செய்யப்படுகின்றன. இந்த ரெயிலில் மேற்கண்ட நாட்களில் இருந்து பயணம் செய்ய விரும்பும் பயணிகள் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்ய வேண்டியதில்லை.

Next Story