தகராறில் ஈடுபட்ட 2 பேர் கைது
பாளையங்கோட்டையில் தகராறில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:
பாளையங்கோட்டை மனகாவலன் பிள்ளை நகர் பகுதியை சேர்ந்தவர் புதிய விஜய் (வயது 23). இவர் சம்பவத்தன்று தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த ராம்குமார் (27), தச்சநல்லூர் பகுதியை சேர்ந்த சுபாஷ் (27) ஆகிய 2 பேரும் புதிய விஜய்யுடன் தகராறில் ஈடுபட்டு அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை தட்டிக்கேட்ட புதிய விஜய்யின் தாயார் பேச்சியம்மாள் என்பவரையும் அவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் ஆத்திரமடைந்த புதிய விஜய், ராம்குமாரை அரிவாளால் வெட்டியதாக தெரிகிறது. இதுகுறித்து ராம்குமார் மற்றும் பேச்சியம்மாள் ஆகிய 2 பேரும் பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்தில் தனித்தனியாக புகார் அளித்தனர். அந்த புகார்களின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து புதிய விஜய், சுபாஷ் ஆகிய 2 பேரையும் நேற்று கைது செய்தனர்.
Related Tags :
Next Story