ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 15 March 2022 1:21 AM IST (Updated: 15 March 2022 1:21 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நெல்லை:
ரெயில்வே ஊழியர்களின் சங்கமான எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்கத்தினர் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். துணை தலைவர் சுப்பையா தலைமை தாங்கினார். இணைச் செயலாளர் ஐயப்பன் முன்னிலை வகித்து ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு 2004-ம் ஆண்டுக்கு முன்பு இருந்ததுபோல் கடைசி சம்பளத்தில் 50 சதவீதம் ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

Next Story