குடிநீர் பிரச்சினையை தீர்க்க துரித நடவடிக்கை- மேயர் சரவணன் பேட்டி


குடிநீர் பிரச்சினையை தீர்க்க துரித நடவடிக்கை- மேயர் சரவணன் பேட்டி
x
தினத்தந்தி 15 March 2022 1:40 AM IST (Updated: 15 March 2022 1:40 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் குடிநீர் பிரச்சிைனயை தீர்க்க துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாநகராட்சி மேயர் சரவணன் தெரிவித்தார்.

நெல்லை:
நெல்லையில் குடிநீர் பிரச்சிைனயை தீர்க்க துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாநகராட்சி மேயர் சரவணன் தெரிவித்தார்.

புதிய அறையில் பணிகள் தொடக்கம்
நெல்லை மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்று மேயராக சரவணன் பொறுப்பேற்று கொண்டார். 
அவருக்கு மாநகராட்சியில் ஒதுக்கப்பட்ட அறை புதுப்பிக்கப்பட்டு, அங்கு பணிகள் தொடங்குவதற்கு ஆயத்தமாக இருந்தது. 
இதையடுத்து நேற்று அப்துல் வகாப் எம்.எல்.ஏ. முன்னிலையில், மேயர் சரவணன் புதிய அறையில் அமர்ந்து தனது பணிகளை தொடங்கினார்.
மேயருக்கு மாநகராட்சி ஊழியர்கள், பொதுமக்கள், ஓய்வுபெற்றோர் நலச்சங்கத்தினர் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். முன்னாள் மேயர் விஜிலா சத்யானந்த் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் மேயர் சரவணன் கூறியதாவது:-

குடிநீர் பிரச்சினையை தீர்க்க...
நெல்லை மாநகராட்சியில் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் விரைந்து செயல்படுத்துவோம். அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். 
குடிநீர் பிரச்சினையை தீர்க்க உடனே துரித நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து நாளை (அதாவது இன்று) அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெறுகிறது. அதன் பிறகு அனைத்து பணிகளும் துரிதமாக நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story