மகாவீரர் கற்சிலை தொல்லியல் துறை அதிகாரிகளிடம் ஒப்படைப்பு
கும்பகோணம் கோர்ட்டில் இருந்து மகாவீரர் கற்சிலை தொல்லியல் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
கும்பகோணம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே 12-ம் நூற்றாண்டை சேர்ந்த மகாவீரர் கற்சிலை கடந்த 1999-ம் ஆண்டு மாயமானது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே ஆண்டில் சிலையை கண்டுபிடித்தனர். பின்னர் அந்த சிலை கும்பகோணம் கோர்ட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. கடந்த 23 ஆண்டுகளாக கும்பகோணம் கோர்ட்டில் இந்த சிலை இருந்து வந்தது. இந்திய தொல்லியல் துறை திருச்சி மண்டல கண்காணிப்பாளர் அருண்ராஜ் தலைமையிலான அதிகாரிகள் சிலையை தங்களிடம் ஒப்படைக்க வேண்டி கும்பகோணம் கோர்ட்டில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிலை தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்தனர். இதையடுத்து அந்த சிலை தொல்லியல் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
Related Tags :
Next Story