விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம்


விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம்
x
தினத்தந்தி 15 March 2022 1:55 AM IST (Updated: 15 March 2022 1:55 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவிலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அருகே உள்ள குறிஞ்சாக்குளத்தில் 1992-ம் ஆண்டு இருதரப்பினர் மோதலில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்துவதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொது செயலாளர் வன்னியரசு தலைமையில் அக்கட்சியினர் சங்கரன்கோவிலுக்கு வந்தனர். அங்கு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அவர்கள் குறிஞ்சாக்குளத்துக்கு புறப்படும்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனை கண்டித்து அவர்கள் போராட்டம் நடத்தினர். பின்னர் இதுதொடர்பாக மாநில அமைப்பாளர் எல்லாலன், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் கதிரேசன், வழக்கறிஞர் அணி அமைப்பாளர் பெஞ்சமின், குருவிகுளம் ஒன்றிய செயலாளர் கனியமுதன், சங்கரன்கோவில் தொகுதி செயலாளர் பீர்மைதீன், வாசுதேவநல்லூர் தொகுதி செயலாளர் பாலகிருஷ்ணன் உள்பட 30 பேரை கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

Next Story