ஆதரவற்ற நிலையில் சுற்றித்திரிந்த 16 பேர் மீட்பு


ஆதரவற்ற நிலையில் சுற்றித்திரிந்த 16 பேர் மீட்பு
x
தினத்தந்தி 15 March 2022 1:57 AM IST (Updated: 15 March 2022 1:57 AM IST)
t-max-icont-min-icon

சத்தியமங்கலம் பகுதியில் ஆதரவற்ற நிலையில் சுற்றித்திரிந்த 16 பேர் மீட்கப்பட்டனா்

சத்தியமங்கலம் மற்றும் பண்ணாரி, சிக்கரசம்பாளையம் பகுதியில் ஏராளமானோர் ஆதரவற்ற நிலையில் சுற்றித்திரிந்தனர். இந்த நிலையில் ஈரோட்டில் உள்ள அட்சயம் தன்னார்வ தொண்டர்கள் நேற்று சத்தியமங்கலம் பகுதிக்கு வந்தனர். அவர்கள் சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் சுற்றித்திரிந்த 6 பெண்கள் உள்பட 16 பேரை மீட்டனர். பின்னர் அவர்களுடைய முடி மற்றும் நகங்களை வெட்டினர். இதையடுத்து அவர்களை குளிக்க வைத்து புத்தாடைகளை அணிவித்தனர். இதைத்தொடர்ந்து 16 பேரையும், தன்னார்வ அமைப்பினர் ஈரோட்டுக்கு அழைத்து சென்றனர். மீட்கப்பட்ட 16 பேரும் விழுப்புரம் மற்றும் பெருந்துறையில் உள்ள காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என தன்னார்வ தொண்டு அமைப்பினர் தெரிவித்தனர்.


Next Story