மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பலி


மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பலி
x
தினத்தந்தி 15 March 2022 2:02 AM IST (Updated: 15 March 2022 2:02 AM IST)
t-max-icont-min-icon

சுரண்டை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி இறந்தார்.

சுரண்டை:
சுரண்டை அருகே ராஜகோபாலபேரியைச் சேர்ந்தவர் ராமர் மகன் மாரிராஜா (வயது 26). கட்டிட தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் இரவில் உறவினர்களான அப்பகுதியைச் சேர்ந்த ராமசாமி மகன் பொன்ராஜ் (30), மாரிமுத்து மகன் மணிகண்டன் (22) ஆகியோரை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றி கொண்டு பரங்குன்றாபுரத்துக்கு புறப்பட்டு சென்றார். வீரகேரளம்புதூர் பெட்ரோல் பங்க் அருகில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கவிழ்ந்தது. இதில் பலத்த காயமடைந்த மாரிராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். காயமடைந்த பொன்ராஜ், மணிகண்டன் ஆகிய 2 பேரும் தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து வீரகேரளம்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story