வீட்டு வசதி துறையில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளுக்கு காங்கிரசே காரணம்; மந்திரி சோமண்ணா பேட்டி


வீட்டு வசதி துறையில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளுக்கு காங்கிரசே காரணம்; மந்திரி சோமண்ணா பேட்டி
x
தினத்தந்தி 15 March 2022 2:05 AM IST (Updated: 15 March 2022 2:05 AM IST)
t-max-icont-min-icon

வீட்டு வசதி துறையில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளுக்கு காங்கிரஸ் தான் காரணம் என்று அத்துறை மந்திரி சோமண்ணா குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

மங்களூரு:

முன்மாதிரி வெற்றி

  தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வாலில் நடந்த தனியார் நிகழ்ச்சியில் வீட்டு வசதித்துறை மந்திரி சோமண்ணா கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

  மக்கள் பா.ஜனதாவிற்கு பெருவாரியான ஆதரவு தெரிவித்துள்ளனர். அதற்கு சாட்சியாக இந்த 5 மாநில தேர்தல் முடிவு அமைந்துள்ளது. நரேந்திர மோடியின் கனவு இந்தியாவை உருவாக்குவோம். வரும் தேர்தலில் கர்நாடகத்திலும் பா.ஜனதா பெருவாரியான இடத்தை கைப்பற்றி வெற்றி வாகைசூடும். இதை யாரும் தடுக்க முடியாது. முந்தைய காங்கிரஸ் அரசு மக்களிடம் செயல் இழந்து காணப்பட்டது. வீட்டு வசதித்துறையில் ஏற்பட்டுள்ள குளறுப்படிகளுக்கு அவர்களே காரணம். அவர்கள் ஆட்சி காலத்தில் 18 லட்சம் கிராமப்புற வீடுகள், 6.6 லட்சம் வீட்டு மனைகளை மத்திய அரசு நிராகரித்துள்ளது.

5 லட்சம் வீடுகள் கட்டப்படும்

  இதற்கு காங்கிரஸ் அரசின் அலட்சியமே காரணம். தற்போது மாநில அரசு சார்பில் சுமார் 5 லட்சம் வீடுகள் கட்டி கொடுப்பதற்கு ரூ.6,612 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று முதல்-மந்திரி பசரவாஜ் பொம்மை தெரிவித்துள்ளார். அதன்படி வீடு இல்லாத ஏழைகளுக்கு வீடு கட்டி கொடுக்கப்படும்.

  கடலோர மாவட்டங்களில் நான் ஆய்வு பணிகள் மேற்கொண்ட நாள் முதல் இன்றுவரை எந்த எம்.எல்.ஏக்கள் மீதும் புகார் வரவில்லை. அவர்கள் தங்கள் பணிகளை சிறப்பாக செய்து வருகின்றனர். வரும் தேர்தலில் சிறப்பாக செயல்பட்டு மீண்டும் பா.ஜனதாவை ஆட்சிக்கு கொண்டுவர அனைவரும் உழைத்து வருகிறார்கள். கர்நாடகத்தில் நிச்சயம் பா.ஜனதா மீண்டும் ஆட்சியை பிடிக்கும்.
  இவ்வாறு அவர் கூறினார்.

Next Story