நினைவேந்தல் நிகழ்ச்சி; போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு
நினைவேந்தல் நிகழ்ச்சியையொட்டி திருவேங்கடம் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவேங்கடம்:
திருவேங்கடம் அருகே உள்ள குறிஞ்சாக்குளம் கிராமத்தில் கடந்த 1992-ம் ஆண்டு கொல்லப்பட்ட 4 இளைஞர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப் போவதாக பல்வேறு அமைப்புகள் அறிவித்து இருந்தன. அதனை தொடர்ந்து குறிஞ்சாக்குளம் பகுதிக்குள் வேற்று நபர்கள் யாரும் நுழையமுடியாத அளவிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இதையொட்டி பஸ்கள் வெள்ளாகுளம் வழியாக வடக்கு அய்வாய்ப்புலிபட்டி மற்றும் காசிலிங்கபுரம் வழியாக திருப்பி விடப்பட்டது.
மேலும் குருஞ்சாக்குளம் கிராமத்தை சுற்றியுள்ள அனைத்து சாலைகளிலும் போலீசார் தீவிர பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனர். திருவேங்கடம் பகுதி முழுவதும் தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் சுமார் ஆயிரம் பேர் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் தலைமையில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் குறிஞ்சாக்குளம் கிராமத்தில் வருகிற 24-ந்தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story