விஷம்குடித்து கொத்தனார் தற்கொலை
சாத்தூர் அருகே விஷம் குடித்து கொத்தனார் தற்கொலை செய்து கொண்டார்.
சாத்தூர்,
சாத்தூர் தாலுகா சத்திரப்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி (வயது 44). இவரது கணவர் ராக்கு முத்து (47). கொத்தனார். இவர் பக்கவாதத்தால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனவேதனை அடைந்த அவர் மதுவில் விஷம் கலந்து குடித்தார். உடனே அவரை சிகிச்சைக்காக சாத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக விருதுநகர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கிருஷ்ணவேணி அளித்த புகாரின் பேரில் சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story