கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 பேருக்கு வீட்டு தனிமையில் சிகிச்சை
கொரோனாவால் 3 பேருக்கு வீட்டு தனிமையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படவில்லை. நேற்று யாரும் கொரோனாவுக்கு உயிரிழக்கவில்லை. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் நேற்று ஒருவர் குணமாகியுள்ளார். தற்போது மாவட்டத்தில் 3 பேர் மட்டுமே கொரோனாவுக்கு வீட்டு தனிமையில் இருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 39 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது. ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக அரியலூர் திகழ்வது குறிப்பிடத்தக்கது. மேலும் அரியலூர் மாவட்டத்தில் 338 பேருக்கு இன்னும் கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.
Related Tags :
Next Story