தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
சாலையை சீரமைக்க வேண்டும்
தக்கலையில் இருந்து கல்குறிச்சி செல்லும் சாலையில் 2 தனியார் பள்ளிகள் உள்ளன. இந்த சாலையில் குழாய்கள் பதிப்பதற்காக அங்கு போடப்பட்டிருந்த அலங்கார தரைகற்கள் அகற்றப்பட்டு பணிகள் நடந்து முடிந்தது. ஆனால், இதுவரை அகற்றப்பட்ட அலங்கார தரைகற்கள் முறையாக பதிக்கப்பட்டு சாலை சீரமைக்கப்படவில்லை. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பள்ளி மாணவ-மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, மாணவ-மாணவிகள் நலன் கருதி சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆரோக்கியதாஸ், தக்கலை.
விபத்து அபாயம்
ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிடங்கன்கரைவிளையில் இருந்து காரவிளைக்கு செல்லும் ஆற்றங்கரை சாலை உள்ளது. இந்த சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதுடன், விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஸ்ரீனிவாசன், ஈத்தாமொழி.
வாகன ஓட்டிகள் அவதி
நாகர்கோவில், பாலமோர் ரோட்டில் தலைமை தபால் நிலையம் செல்லும் சாலை சந்திப்பு பகுதி உள்ளது. 4 முனை சந்திப்பு பகுதியான இங்கு சாலை சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். விபத்துகளும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாகன ஓட்டிகள் நலன் கருதி சாலையில் சேதமடைந்த பகுதியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-புகழேந்தி, ஆரல்வாய்மொழி.
வீணாகும் குடிநீர்
நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட 44-வது வார்டு பட்டக சாலியன்விளையில் முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் சாலையில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், குடிநீர் வீணாக கழிவுநீர் ஓடையில் பாய்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த குழாயை சீரமைத்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும்.
-நவீன், பட்டக சாலியன்விளை.
சுகாதார சீர்கேடு
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட 7-வது வார்டில் தெற்கு தெருவில் கழிவுநீர் ஓடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஓடையை முறையாக பராமரிக்காததால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஓடையை தூர்வாரி கழிவுநீர் வடிந்தோட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முருகன், அருகுவிளை.
Related Tags :
Next Story