15 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது
சேலத்தில் 15 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது.
சூரமங்கலம்:
சேலம் பழைய சூரமங்கலம் பகுதியை சேர்ந்த 20 வயதுடைய தொழிலாளி ஒருவர், தனது அக்காள் மகளான 15 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியான அந்த சிறுமியை பிரசவத்துக்காக நேற்று சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அப்போது சிறுமிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதனிடையே சிறுமிக்கு 15 வயது மட்டுமே ஆவதால், ஆஸ்பத்திரி நிர்வாகம் சார்பில் சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் அனைத்து மகளிர் போலீசார், அந்த சிறுமியின் கணவர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story