ஊதிய உயர்வு வழங்கக்கோரி சேலத்தில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


ஊதிய உயர்வு வழங்கக்கோரி சேலத்தில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 15 March 2022 3:58 AM IST (Updated: 15 March 2022 3:58 AM IST)
t-max-icont-min-icon

ஊதிய உயர்வு வழங்கக்கோரி சேலத்தில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சேலம்:
சேலம் உடையாப்பட்டி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று மாலை ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் அதன் செயல் தலைவர் கஜேந்திரன் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மின்சார ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.  இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, 1.12.2019 முதல் வழங்கிட வேண்டிய ஊதிய உயர்வுக்கான பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும், ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும், மேட்டூர் பணிமனையின் உற்பத்தி திறனை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Next Story