பெண்ணிடம் 10 பவுன் சங்கிலி பறிப்பு


பெண்ணிடம் 10 பவுன் சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 15 March 2022 5:34 PM IST (Updated: 15 March 2022 5:34 PM IST)
t-max-icont-min-icon

திருச்சி தில்லைநகரில் மோட்டார் சைக்கிளில் வந்து பெண்ணிடம் 10 பவுன் சங்கிலி பறித்து சென்ற 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

திருச்சி, மார்ச்.16-
திருச்சி தில்லைநகரில் மோட்டார் சைக்கிளில் வந்து பெண்ணிடம் 10 பவுன் சங்கிலி பறித்து சென்ற 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
சங்கிலி பறிப்பு
திருச்சி தில்லைநகர் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவருடைய மனைவி மகேஸ்வரி (வயது 45). இவர் இன்று காலை 10.30 மணி அளவில் காந்திபுரத்தில் வசிக்கும் தனது உறவினரான பத்மபிரியாவை அழைத்து கொண்டு துக்க காரியத்துக்கு செல்வதற்காக நடந்து சென்றார். அவர் தில்லைநகர் 80 அடிரோட்டில் சென்றபோது, அவருக்கு எதிர்புறம் மோட்டார்சைக்கிளில் 2 பேர் வந்தனர்.
அவர்கள் மகேஸ்வரி கழுத்தில் அணிந்து இருந்த 15 பவுன் தாலி சங்கிலியை திடீரென பறிக்க முயன்றனர். ஆனால் அவர் சுதாரித்து கொண்டு சங்கிலியை இறுக்க பிடித்து கொண்டார். அப்போது சங்கிலி அறுந்ததில் 5 பவுன் மகேஸ்வரி கையிலும், 10 பவுன் அந்த வாலிபர்களின் கையிலும் சிக்கி கொண்டது. உடனே அந்த வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த சம்பவத்தை கண்ட அந்த பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
கேமரா காட்சிகள் ஆய்வு
இதையடுத்து தில்லைநகர் மற்றும் உறையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சங்கிலியை பறிகொடுத்த பெண்ணிடம் விசாரணை நடத்தினார்கள். மேலும், அந்த வாலிபர்கள் அணிந்திருந்த உடையின் நிறம் மற்றும் அங்க அடையாளங்களை கேட்டறிந்தனர். தொடர்ந்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இதுகுறித்து தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story