வெள்ளரி பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம்


வெள்ளரி பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம்
x
தினத்தந்தி 15 March 2022 5:41 PM IST (Updated: 15 March 2022 5:41 PM IST)
t-max-icont-min-icon

கோடை காலம் தொடங்கி உள்ளதால் வாணாபுரம் மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் வெள்ளரி பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வமாக உள்ளனர்.

வாணாபுரம்

கோடை காலம் தொடங்கி உள்ளதால் வாணாபுரம் மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் வெள்ளரி பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வமாக உள்ளனர். 

வெள்ளரி, தர்பூசணி

வாணாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயம் மிக முக்கிய பங்கு வகித்து வருகிறது. 

இப்பகுதி விவசாயிகள் பெரும்பாலும் நெல், கரும்பு, மக்காச்சோளம், கேழ்வரகு, மணிலா உளுந்து உள்ளிட்ட பயிர்களையும், மேலும் பருவகால பயிராக பூக்கள் வகை பயிர்களையும் பயிரிட்டு, பராமரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது வெயில் காலம் தொடங்கியுள்ள நிலையில் அதற்கு ஏற்றவாறு தர்பூசணி, வெள்ளரி, முலாம்பழம் உள்ளிட்ட பழ வகைகளை பயிரிட்டு அதனை விற்பனை செய்து வருகின்றனர். 

தொண்டாமனூர், அகரம்பள்ளிப்பட்டு, வாணாபுரம், தச்சம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் மருத்துவ குணம் கொண்ட வெள்ளரியை விவசாயிகள் அதிகளவில் ஆர்வமாக பயிரிட்டுள்ளனர். 

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

மருத்துவ குணம்

பெரும்பாலும் வெள்ளரிக்காய் என்பது பல ரகம் கொண்டதாக உள்ளது. அந்த வகையில் இந்த வெள்ளரிக்காய் தரையில் படர வைக்காமல் கம்பு கொண்டு செடி அருகில் பந்தல் அமைத்து அதன் கொடிகளை கயிறு கட்டி அதன் மூலம் மேலே படர்ந்து செல்லும்படி செய்கிறோம், 

காய்கள் சிறிய அளவு என்பதால் அதற்காக எளிதில் காய்களை அறுவடை செய்வதற்கும் இதனை பயன்படுத்தி வருகிறோம். மேலும் காய்களின் அளவு பொறுத்து இங்கு விற்பனையாகிறது. 

மேலும் அளவுகள் சிறிதாகவும் மேல்பகுதி முட்கள் நிறைந்து இருப்பதால் இதனை மருத்துவ குணம் கொண்ட வெள்ளரிக்காய் என்று இதனை பல்வேறு மாவட்டங்கள் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களுக்கும் இந்த காய்களை வாங்கி செல்கின்றனர். 

மேலும் அறுவடை செய்யப்படும் காய்களை நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு வருவதால் அலைச்சல் இல்லாமல் உள்ளது. காய்களின் தரத்திற்கு ஏற்றவாறு விலை நிர்ணயிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

Next Story