வல்லநாட்டில் உலக காசநோய் தின விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு


வல்லநாட்டில் உலக காசநோய் தின விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு
x
தினத்தந்தி 15 March 2022 6:40 PM IST (Updated: 15 March 2022 6:40 PM IST)
t-max-icont-min-icon

வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக காசநோய் தின விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது

ஸ்ரீவைகுண்டம்:
 தேசிய காசநோயகற்றும் திட்டம் வல்லநாடு காசநோய் பிரிவு சார்பாக கருவுற்ற தாய்மார்களிடையே காசநோய் விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்  நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் சுந்தரி தலைமை தாங்கினார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முத்துகுமாரவெங்கடேசன் முன்னிலை வகித்தார். சுகாதார ஆய்வாளர் சாகிர் வரவேற்று பேசினார். அனைவரும்  உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் ஆய்வக நுட்பனர்கள் ராஜேஸ்வரி, உஷாராணி, செவிலியர் தங்க முத்துகுமாரி, பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் வேம்பன், சுகாதாரத் துறைபணியாளர்கள் மற்றும் கருவுற்ற தாய்மார்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நம்பிக்கை மைய ஆற்றுப்படுத்துநர் அய்யம்மாள் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை வல்லநாடு காசநோய் பிரிவு முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் அப்துல் ரஹிம் ஹீரா செய்திருந்தார்.

Next Story