நாமக்கல்லில் விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


நாமக்கல்லில் விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 15 March 2022 7:59 PM IST (Updated: 15 March 2022 7:59 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நாமக்கல்:
100 நாள் வேலை திட்டத்திற்கான நிதியை குறைத்துள்ள மத்திய அரசை கண்டித்து இன்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜெயராமன் தலைமை தாங்கினார். இதில் ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலாளர் தனசேகரன், கட்டிட சங்க மாவட்ட செயலாளர் நந்தகுமார், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தின் போது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட நிதி ஒதுக்கீட்டை ரூ.2½ லட்சம் கோடியாக உயர்த்த வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக அதிகரிக்க வேண்டும். தினசரி ஊதியமாக ரூ.600 வழங்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை பேரூராட்சி பகுதிகளுக்கும் விரிவுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Next Story