ஆர்.கே.பேட்டை அருகே கால்வாயில் பாய்ந்த லாரி
ஆர்.கே.பேட்டை அருகே கால்வாயில் பாய்ந்த லாரி டிரைவர் படுகாயம் அடைந்தார்.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த ராஜாநகரம் மோட்டூர் கிராமம் சுடுகாடு அருகே சோளிங்கர் - பள்ளிப்பட்டு தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையில் உள்ள மேம்பாலத்தில் இருந்து ஒரு லாரி ஓடை கால்வாயில் பாய்ந்து நேற்று விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் லாரியின் ஒரு பகுதி சேதம் அடைந்தது. இந்த லாரி நாமக்கல் மாவட்டத்தில் இருந்து பள்ளிப்பட்டு பகுதியில் கரும்பு சக்கை ஏற்றிச்செல்ல காலியாக வந்தபோது விபத்துக்குள்ளானது. லாரியை நாமக்கல் மாவட்டம் கார்கூடல்பட்டி கிராமத்தை சேர்ந்த ரவிக்குமார் (வயது 36) என்பவர் ஓட்டி வந்தார். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.
இதையடுத்து அவர் சிகிச்சைக்காக சோளிங்கர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து ஆர்.கே. பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் டிரைவர் ரவிக்குமார் தூக்க கலக்கத்தில் லாரியை ஓட்டியதால் இந்த விபத்து நடந்ததாக தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story