விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 15 March 2022 8:26 PM IST (Updated: 15 March 2022 8:26 PM IST)
t-max-icont-min-icon

100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்தக்கோரி நாகையில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்:
100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்தக்கோரி நாகையில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் பாஸ்கர் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ராமலிங்கம் முன்னிலை வகித்தார். 
இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சம்பந்தம், மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் பாண்டியன், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட பொருளாளர் மகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
200 நாட்களாக உயர்த்த வேண்டும்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் 100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்த வேண்டும். தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக நாளொன்றுக்கு ரூ.600 வழங்க வேண்டும். நூறு நாள் வேலைத்திட்டத்தை நகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.
சிறு, குறு விவசாயிகள் மாதம் ரூ.3 ஆயிரம் வழங்கும் வகையில் தமிழக அரசு தனி ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். வீடு இல்லாத நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு 400 சதுர அடியில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டித்தர வேண்டும் என்பன உள்ளிட்ட  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
...

Next Story