மகளிர் சுய உதவி குழுவினர் மகளிர் திட்ட அலுவலகத்தில் உடனடியாக பதிவு செய்யலாம்: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர்
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குனரது கடிதத்தின்படி 2022-23-ம் ஆண்டு கோடை கொண்டாட்டத்தை முன்னிட்டு மாநில அளவிலான மகளிர் சுய உதவி குழுக்களின் உற்பத்தி பொருட்களின் விற்பனை கண்காட்சி ஏப்ரல் மாதம் அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில் கோடை கொண்டாட்டத்திற்கு தொடர்புடைய பொருட்களை உற்பத்தி செய்யும் மகளிர் சுய உதவி குழுக்கள் கலந்து கொள்வதற்கு தங்களது உற்பத்தி பொருட்களின் விவரங்களை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மகளிர் திட்ட அலுவலகத்தில் உடனடியாக பதிவு செய்து அதன் விவரத்தை தெரிவித்திட வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story