முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு தொடர்புடைய நகைக்கடையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு தொடர்புடைய நகைக்கடையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
x
தினத்தந்தி 15 March 2022 9:15 PM IST (Updated: 15 March 2022 9:15 PM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூரில் முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு தொடர்புடைய நகைக்கடையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டது பரபரப்ைப ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர்

திருப்பத்தூரில் முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு தொடர்புடைய நகைக்கடையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டது பரபரப்ைப ஏற்படுத்தி உள்ளது.

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் இந்த சோதனைகள் நடந்தன.

திருப்பத்தூர் நகரில் கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் செயல்பட்டு வரும் நகைக்கடையில் நேற்று காலை 6 மணிக்கு வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் ரஜினி தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினர் சோதனையை தொடங்கினர். 

இந்த சோதனை இரவு‌ 8 மணி வரை தொடர்ந்து 15 மணி நேரம் நீடித்தது. சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. 

லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் காலை வந்தவுடன் சற்று நேரம் கடை திறந்துவைக்கப்பட்டு இருந்தது. பிறகு ஷட்டர் மூடப்பட்டு உள்ளே யாரையும் அனுமதிக்கப்படவில்லை. இந்த சோதனையால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story